Sunday, September 6, 2009 at 9:27 PM |  
அம்மா என்பார், அய்யா என்பார்...
உங்கள் வீட்டு பிள்ளை என்பார்...

ஓட்டு கேட்பார்... உங்களில் ஒருவன் என்பார்...
ஊருக்கு உழைக்க ஒரு வாய்ப்பு கேட்ப்பார்...
உதவிக்கு ஓடி வருவேன் என்பார்...

இத்தனையும் சொல்லிவிட்டு சட்டசபையில்
விபச்சாரம் செய்வார்...

இந்த வீணர்களின் கையில்
இந்த நாடு இருந்துநாசமாய் போகுதடி ஞானதங்கமே...
நீ நாலும் தெரிஞ்சி நடத்துக்க ஞானதங்கமே...

அழகாய் ஆடிடுவார்...
அழுது புரண்டிடுவார்....
நீதிக்கு குரல் கொடுப்பார்...
ஏழைக்கு தோழன் என்பார்...

நடிக்க வந்ததே நான் அறியாதது என்பார்...
உன் தோளின் கைப்போட்டே புகைப்படம் எடுக்கவிட்டுஉன் மடியில் கைவைக்கும் கூட்டமடி...ஞானதங்கமே..

ஆடி முடித்து அமரும் இடமாய்...
அவருக்கு ஆட்சிக்கட்டில் ஆகுமடி ஞானதங்கமே..
இவர்கள் கையில் இளிச்ச வாயர் கூட்டம் இருக்கு ஞானதங்கமே...
நீ இருப்பதை காப்பாத்திக்க ஞானதங்கமே..

0 comments:

Visit the Site
MARVEL and SPIDER-MAN: TM & 2007 Marvel Characters, Inc. Motion Picture © 2007 Columbia Pictures Industries, Inc. All Rights Reserved. 2007 Sony Pictures Digital Inc. All rights reserved. blogger templates